கருவுறுவதற்கு தேவையான உணவுகள் என்ன? 

ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் பொது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியம் மற்றும் நாள்பட்ட நோயின் அபாயம் பற்றிய உணவு முறைகள் பற்றிய ஆய்வுகள் அதிக அளவில் இருந்தாலும், கருவுறுதல் பற்றிய ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதற்கான ஆரோக்கிய குறிப்புகள் பல பட்டியலிடப்பட்டாலும், ஒரு பெண் கர்ப்பம் தரிக்க என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும்? என்பது பெரிய அளவில் விவாதிக்கப்படுவதில்லை.

சண்டிகரில் உள்ள கிளவுட்நைன் குழும மருத்துவமனைகளின் கருவுறுதல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் காஞ்சி குரானா கருத்துப்படி, சில உணவுகள் கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உதவும்.

மக்ரோநியூட்ரியண்ட்ஸ்: டயட் கலவை முக்கியமா?
மலட்டுத்தன்மையுள்ள தம்பதிகளில் எடை குறைப்பதன் நன்மைகள் நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளன. கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகள் உள்ள தம்பதிகளுக்கான உணவு வழிகாட்டுதல்களில், கொழுப்பு குறைவான உணவுகள், கொட்டைகள், ஆலிவ் எண்ணெய் முக்கியமானவைகளாக இருக்கின்றன.

தினசரி உணவில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் கால் பங்காக இருக்க வேண்டும். உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், இனிப்பு சோளம், பாஸ்தா, நூடுல்ஸ் மற்றும் அரிசி போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

புரதம் நிறைந்த உணவுகள், தினசரி உணவின் 25% இருக்க வேண்டும். குறைந்த அளவிலான சிவப்பு இறைச்சி, கோழி  முட்டை, டோஃபு மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை எடுத்துக் கொள்ளலாம். பச்சை காய்கறிகள், கேரட், பச்சை பீன்ஸ், பட்டாணி, ப்ரோக்கோலி மற்றும் பல்வேறு நிறங்களைக் கொண்ட காய்கறிகளை உண்ணவும்.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *